வியாழன், 14 ஜூன், 2012

சந்தோஷம்

சிரிக்க கற்றுக்கொடுத்துவிட்டு 
சிட்டாக பறந்துவிட்டாள்

வண்ணம்


பார்த்து பார்த்து 
வண்ணங்களை தீட்டினால்
அவள் 
கனவில் 
நிஜத்தில் பார்வையற்றவளாய் .......

வெள்ளி, 23 மார்ச், 2012

என் நம்பிக்கை


உன்னை யாருக்கும்
விட்டுகொடுக்க
மனம் வரவில்லை
காரணம்
நீ என் மீது
கொண்ட காதலினால்
அல்ல ,
நான் உன் மீது
கொண்ட நம்பிக்கையினால் ...
மெய்யாக்கிவிடு
என் நம்பிக்கையை !

பிரிவு

பிரிந்து விடு ! பிரிந்து விடு
என்று நீ சொல்லும்போதெல்லாம்
வலிக்கவில்லை ,
வலிக்கிறது இன்று
உன் பிரிவினால் அல்ல,
நான் உன்னை புரிந்து
கொள்ளவில்லை என்று
நீ சொன்ன வார்த்தையால் ...

வியாழன், 22 மார்ச், 2012

ஆண் பிரசவம்

ஆண்களும் தாய்மை
அடைவர் 
எப்போது தெரியுமா?
ஒரு பெண்ணை
உண்மையாக
நேசிக்கும் போது ....

மன்னிப்பு

 மன்னிக்க பழகு
தோழியே !
நீ கூட
மகாத்மா ஆகலாம்....

மழை

மண்மீது தான் 
காதல் என்றாலும் 
அலையா விருந்தாளியாக 
உங்களை காணவே
வருகிறேன் ,
நீங்களோ பயந்து 
ஓடுகிறீர்கள் 
தூரத்தில் நின்று 
ரசிக்கும் சிலர்
தொலைகாட்சி பெட்டியில் 
வந்தால் மட்டும் விரும்பும்
சிலர்
இப்படி பலவிதமானோர் ,
இருந்தும் நான் 
வரத்தவருவது  இல்லை ,
விருந்தோம்பல் பண்பு 
மனிதர்களுக்கு மட்டும் தான்
போலும் ,
ஒரு முறையேனும் 
என்னுடன் விளையாடி பாருங்கள் 
உணர்வீர்கள் நிச்சயம் 
என் நட்பை ....


புதன், 21 மார்ச், 2012

நின் பிறப்பு

நீ பிறப்பெடுத்ததன்
காரணம்
அறிவாயோ மாட்டாயோ
நான் அறிவேன்
நிச்சயம் என்னை
கரம் பிடிக்கவே என்று...

செவ்வாய், 20 மார்ச், 2012

நிரந்தரம்

மனிதனாக பிறக்க என்ன பாவம் செய்தேனோ ?
நிலையில்லா வாழ்கையே நிரந்தரம் ஆகிப்போனது
நிலையில்லா வாழ்க்கையில் உறவுகள்
மட்டும் எப்படி நிரந்தரமாகும் ?
தெரிந்தும் கவலைப்படுவது ஏன் ?
காரணம் தான் இன்றளவும் விளங்கவில்லை,
புரியாத புதிரான என் வாழ்க்கையில் 
நீ மட்டும் நிரந்தரமாக வருவாயா ?
வருவாய் என்ற நம்பிக்கையுடன்
நான்  ! . . .