செவ்வாய், 24 ஜூலை, 2018

கதை

வழக்கத்திற்கு மாறாக
கதையை இன்று
நீ
சொல்ல நான் கேட்கிறேன்
அடடா !
எத்துணை இனிமை...
கரு இல்லாத
கதை கூட அழகாக உள்ளதே
நீ சொல்வதால்..

வியாழன், 14 செப்டம்பர், 2017

அவப்பெயர்

  

முன் ஒரு நாளில் அகம் மகிழ்ந்தேன்

பின் ஒரு நாளில் தலை குனிந்தேன்

உன் நிலை இப்படி ஆனதற்கு நீ மட்டும் காரணம் அல்லவே

எனில் உன் மீது மட்டும் ஏன் இந்த கோபம் எனக்கு ?

இந்த சமுதாயம் உன்னை இன்று இழிவாக பேசலாம்

என்றாவது புரிந்து கொள்வார்கள்

உன்னை,

நீ செய்த உதவியை

உன் நன்றி மறவா குணத்தை

உன் நல்லெண்ணத்தை

இருப்பினும் பயனில்லை

பொய்களுக்கு இடையில் வாழும்

மெய்யுக்கு ஆயுட்காலம் குறைவு

கேள்வி பட்டேன் இன்று

சிலர் உன் நிலை கண்டு வருந்திகிறார்களாம்

அன்று நீ சொல்ல கேட்க யாருமில்லாமல் போனார்கள்

இன்று அவரவர் கட்டும் கதைகளுக்கு

நீ கதாபாத்திரம் ஆகிவிட்டாய்

சொல் பேச்சு கேக்காமல் இருந்ததால்

இன்று அனைவரின் பேச்சுக்கும் ஏச்சுக்கும் ஆளாகி விட்டாய்

என்ன செய்வது அம்மா ? மனம் ஆறவில்லை எனக்கு

உன்னை பற்றி ஒருவரேனும் யோசித்தர்களா ? - இல்லையே அம்மா

பின் நீ ஏன் எல்லோரையும் நம்பினாய் ?

இன்று பார்த்தாயா

நீ நம்பியவர்கள் உனக்கு துரோகம் இழைக்க

உன்னை நம்பியவர்கள் முன் நீ குற்றாவாளி ஆகிவிட்டாய் ….

நீ இன்னும் எவ்வளவு வேதனை பட போகிறாய் ?

தாய் தந்தையரின் அன்பு முழுவதும் கிடைக்காமல்

சிறு வயதிலேயே பல இன்னல்களை அடைந்து விட்டாய்

அன்புக்காக ஏங்கிய

உன்னை ஆசை வார்த்தை பேசி ஏமாற்றியவன்

இன்று சுகமாய் இருக்கிறான் எங்கேயோ !

அவனுக்காக சுற்றமும் எதிர்த்த நீ

இன்று ஒதுக்கப்பட்டு விட்டாய்

வட்டிக்கு பணம் வாங்கினாய்

இன்று உன் வாழ்க்கையும் சேர்த்து  அசலாக திருப்பி கொடுத்து விட்டாய்

உன்னை நம்பியர்வர்கள் உன்னை ஏசினாலும்

உன்னால் பதில் சொல்ல முடியவில்லை

அனுதினமும் நீ அழுகிறாய் நினைத்து நினைத்து …

உன்னை பார்க்கையில் ஒரு புறம் கோவம்

ஒரு புறம் பரிதாபம் என் செய்வேன் அம்மா ?

உன்னால் எனக்குமல்லவா வேதனை

எப்படி புரிய வைப்பேன் ? அனைவர்க்கும்

உன்னை ஏமாற்றியர்களை பற்றி,  நீ ஏமாந்த கதை பற்றி

உன் முட்டாள் தனத்தை

என்ன சொல்வதென்று புரியவில்லை அம்மா எனக்கு

என் கையாளாக தனத்தை

கவிதை மூலம் உரக்க சொல்ல தெரிந்த எனக்கு

வாய்விட்டு அனைவரிடமும் சொல்ல முடியவில்லை

என்னால் முடியவில்லை அம்மா -  நீ படும் வேதனையை பார்க்க

நீ பெற்ற பிள்ளைகள் உன்னால்

வருத்தப்படுவதை கண்டு உன்னால் என்ன செய்ய முடிகிறது

கடன் அன்பை மட்டும் முறிப்பதில்லை அம்மா

வாழ்க்கையையே வம்சத்தையே ஒழித்து விடுகிறது

ஒரு நிமிட கவன குறைவு தான் விபத்து

அதை விட கொடுமையானது

பெற்றோர்கள் எடுக்கும் தவறான முடிவு

பிள்ளைகள் அல்லவா பலி ஆடுகள் ஒரு சிலருக்கு

எத்தனை எத்தனை சாபங்கள்

எத்தனை எத்தனை பொய் கதைகள்

மகளாக இருந்து என் கடமையை செய்து விட்டேன்

உன் உயிரை காப்பாற்ற கடமை பட்டிருக்கிறேன்

ஏனெனில்

என் உயிர் தந்தவள் நீயல்லவா !

 

 

 

- யாஸ்மின்