தமிழ் மங்கை
தமிழை நேசிக்கும் பலரில் ஒருவள் .....
புதன், 8 மே, 2013
ஏற்றுக்கொள் காதலை
காதல் சிறையில்
ஆயுள் கைதியாய்
வாழ ஆசை படுகிறேன்
என்னை தூக்குதண்டனை
கைதியாய் மாற்றிவிடாதே !
சீருடை
பணக்காரன் ஏழை
மேல் சாதி கீழ் சாதி
என்ற வேற்றுமையை
திங்கள் முதல் வெள்ளி
வரை உடைத்தெறிந்த
சீருடை சனிக்கிழமை
மட்டும் அப்பட்டமாய்
காட்டியது உண்மையை ....
இப்படிக்கு மரம்
காற்றே !
தீண்டாமை ஒரு குற்றமாம்
போகும்போதே தீண்டி விட்டு செல்
இல்லையேல் குற்றவாளி ஆவாய் ...
நண்பனாய் ஒரு காதலன்
அர்த்தமற்ற என் வாழ்கைக்கு
அர்த்தம் தர வந்தவன் நீ
காதலனாய் அல்ல நண்பனாய்
காதல் ஓவியம்
ஓவியமாய் நாம் இருவரும்
தூரிகையாய் நம் காதல் ....
காதல்
பூட்டிய வீட்டில்
மாட்டிகொண்டன
பூனைகள் ...
புதிய இடுகைகள்
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)