செவ்வாய், 16 ஏப்ரல், 2013

என் பள்ளி


புழுதியான சாலை
தேங்கிய தண்ணீர்
பரபரப்பான தேர்வு
பதறிய நொடிகள்
தெரிந்த கேள்விகள்
தெரியாத பதில்கள்
உடைந்த பென்சில்
கடன் கொடுத்த ரப்பர்
கடன் வாங்கிய பேப்பர்
அவிழ்ந்த ரிப்பன்
எண்ணெய் தலைகள்
பவுடர் பூசிய முகங்கள்
பழக்கமில்லாத நபர்கள்
கடந்து வந்த சாலைகள்
இடிந்த கட்டிடம்
உணவு இடைவேளை
களவாடிய பொருட்கள்
கவனிக்காத அறிக்கைகள்
கற்றுக் கொண்ட பாடங்கள்
களட்டி விட்ட தோழி
சின்னதாய் ஒரு கோபம்
பெரிதாய் ஒரு சிரிப்பு
கண்ணீரை துடைத்த
கைகள்
ஓடி விளையாடிய பொழுது
முடிக்காத வீட்டுப்பாடம்
மை இல்லாத பேனா
கிறுக்கிய இருக்கை
கிறுக்கல் இல்லா மனம்
தண்டனை தந்த ஆசிரியர்
விடுமுறை தந்த ஏக்கம்
உடைந்த கரும்பலகை
ஒளித்துவைத்த சிலேட்டு குச்சி
ஒப்புவித்த திருக்குறள்
மனனம் செய்த செய்யுள்
பிழையில்லா பேச்சு
பிழை செய்யும் இலக்கணம்
கந்த ஆடைகள்
வரிசையில் நின்ற கூட்டம்
நடனம் ஆடிய மேடை
முதல் வாழ்த்து அட்டை
திருப்பி கொடுத்த பரிசுகள்
காணாமல்போன புத்தகம்
அட்டை போட்ட நோட்டுகள்
எச்சில் தின்பண்டம்
ருசி பார்த்த உணவு
இவை அனைத்தும்
நினைக்க மறப்பதில்லை
சாலையோர பள்ளிகளை
கடக்கும் போது .......

திங்கள், 15 ஏப்ரல், 2013

பேஸ்புக்


படிக்க பிடிக்காதவர்களுக்கும்
உன்னை பிடிக்கிறது
உன்னை அறிந்த நாள்
முதல் நான்
பலரை புதிதாக
அறிந்து கொண்டேன் .
பழைய நட்பையும் ,
புதுப்பித்துவிட்டாய்
புதிய நட்பையும்
உருவாக்கிவிட்டாய் .


அழகில்லாதவர்களும் அழகாக
தெரிகின்றனர் உன்னால் ,
உன்னால் இணைந்தவர்களும்
பிரிந்தவர்களும் ஏராளம்
உன் பயன்படுகளோ
தாராளம் ...


உனக்கு இணையாக
Orkut, Twitter இருந்தாலும்
உனக்கான மதிப்பு
குறைவதில்லை என்றும்

குழந்தை முதல் பெரியவர்
வரை உனக்கு
பழக்கமில்லாதவர்கள் இலர்


உன்னை காண வருபவர்களை
வசியம் செய்கிறாய்
சிலரை அடிமையாக மாற்றுகிறாய்
பலரை பைத்தியம் ஆக்குகிறாய்

நீ அறியாத மொழிகள்
தான் உண்டா இல்லை
நீ இல்லாத இடம் தான் உண்டா ?

Like என்ற பெயரில்
நட்பை வளர்க்கிறாய்
Comment என்ற பெயரில்
கேலித்தனம் செய்கிறாய்
Block என்ற பெயரில்
சில சமயம் சங்கடபடுத்தினாலும்

Request என்ற பெயரில்
ஆனந்தப்படுத்துகிறாய்

Chat மூலம் நேரத்தை
கழிக்க வைத்தாலும்
Apps மூலம் விளையாட
கற்றுக்கொடுக்கிறாய்
Poke என்ற பெயரில்
கிள்ளும் நீ,
என்னுடன் பேசாத
நண்பன் ஆகிறாய்

நீ இல்லாத Internet
அர்த்தமற்று தான் போகிறது
சில சமயங்களில்  ! ! !





நாகரிக வளர்ச்சி

Buffet என்ற பெயரில் 
பல பதார்த்தங்கள் உண்டாலும்
வாழை இலை தரும்
ருசி கிடைப்பதில்லை
இன்று 

Page page ஆக அனுப்பும் 
E-Mail இல் கடிதம் தரும் 
திருப்தி கிடைப்பதில்லை
இன்று

Video Chat இல்
உன்னைப் பார்த்தாலும் 
உன் அருகாமை தரும் 
இதம் கிடைப்பதில்லை
இன்று 

AC காரில் சென்றாலும் 
வேப்ப மர நிழல் தரும் 
குளுமை கிடைக்கவில்லை 
இன்று 

Outing என்ற பெயரில் ஊர்
சுற்றினாலும் குட்டிச்சுவர்
தந்த உவகை இல்லை
இன்று 

Serial பார்த்த எங்களுக்கு 
தெருக்கூத்து பிடிக்கவில்லை 
இன்று 

Ovan இல் பார்த்து பார்த்து 
சமைத்தாலும் 
மண் சட்டி தரும் 
பதம் கிடைக்கவில்லை 
இன்று 

Virtual Visit செய்த போதிலும் 
கோவில் திண்ணை 
தரும் நிம்மதி 
கிடைக்கவில்லை 
இன்று 

Desserts என்ற பெயரில் பல
இனிப்புகள் இருந்தாலும்
கருப்பட்டி சுவை 
மறப்பதில்லை
என்றும் 

கண்ணாமூச்சி தந்த
சந்தோசம் கிடைக்கவில்லை 
Video Games இல் 

நாகரிக வளர்ச்சி என்ற பெயரில் 
நீ நடத்தும் நாடகத்தில் 
எங்களையும் நடிகர்களாக 
மாற்றிவிட்டாய் ,
தொழில்நுட்பம் என்ற பெயரில் 
தொல்லையாக நீ மாறுவதை 
உணரவில்லை போலும் 

எனக்கு கிடைத்த பொக்கிஷம் 
என் மகனுக்கோ என் பேத்திக்கோ 
பள்ளிப் பாடமாக மட்டுமே
வரப் போகிறது 
என நினைக்கும் போது 
ஆதிமனிதன் ஆக
மாறிவிட்டால் என்ன என்று 
தோன்றத்தான் செய்கிறது 
எல்லோருக்கும் ,
கையில் காபியுடன் 
நான் முதியோர் இல்லத்தில் ...

எனக்குப் பிடித்தவன்

சில நேரங்களில்
சிலரைப் பிடிக்கும்
பல நேரங்களில்
பலரைப் பிடிப்பதில்லை
பிடிப்பதற்கும் பிடிக்காதற்கும்
காரணங்கள் ஆயிரம்
இருப்பினும் சொல்ல
தெரியவில்லை
என்றும் எனக்கு
பிடித்தவன் நீதான்
என்பதை ......

ரப்பர்

உன்னைக் கடன்
கொடுக்காதவரும் இலர்
கடன்  வாங்காதவரும்
இலர் ,
பெரும்பாலான நட்பு
உன்னால் மலர்ந்ததே !

குடை

நீ என்னுடன்
இருக்கும் போது
மட்டும்
இயற்கை அன்னை
ஏமாற்றுகிறாள்....

முதியோர் இல்லத்தில் தாய்

ஆயிரம் வார்த்தைகள்
தராத சந்தோசம்
உன் முதல் கிறுக்கல்
எனக்கு தந்தது ....

கரண்ட்

நேசிப்பவர்களை கண்டால்
மட்டுமே வரும்
பிரகாசமானது இன்று
உன்னைக் கண்டால்
மட்டுமே வருகிறது .....

வெள்ளி, 12 ஏப்ரல், 2013

என் குரு வைரமுத்து அவர்களுக்கு !

என் திறமையை தேட
சொன்னர்கள்
நானோ என்னையே
என்னுள் தேடினேன் !
தேடலில் பலமுறை
தடங்களை தொலைத்ததுண்டு ...
இருப்பினும் இளமையின்
வேகம் என்னை விடவில்லை.
தேடலின் நீளம் அதிகமானது
கடைசியாக உன் பாதையில்
பயணிக்க எண்ணினேன்.
சிறு வயதில் நடக்க
கற்றுக்கொண்டேன்
விழுந்து  எழ
கற்றுக்கொடுத்துதது
அனுபவம் .....
தேடலும் தொடங்கியது
உன் பாதையும் அடைந்தேன் !
இன்றும் உன்னை காண
முடியவில்லை என்ற
ஏக்கத்துடன் திரும்பும்
 பல குரல்களுக்கு
மத்தியில் உன்னைகண்டே
தீருவேன் என்ற சில
குரல்களுடன்  நானும்
ஒருவள் ஆக வலம் வருகிறேன்,
உன் கைகளைப் பிடித்து
கவிதை நடை பயில
விரும்பும் பலரில்
ஒருவளாக ! :) :) :)


திங்கள், 1 ஏப்ரல், 2013

அண்ணியாக ஒரு தோழி !

உன்னிடம் பழகிய
நாட்கள் என்னவோ
குறைவுதான் ஆனால்
பரிமாறிக்கொண்ட
விஷயங்கள் அதிகம் ! !
அண்ணியாக வரப்போகும்
நீ இரட்டைச்சதம் அடித்து
விட்டாய் .....
ஒன்று என் அண்ணன்
மற்றொன்று நான் ! !
புகுந்த வீடு
புதிராக இருந்தாலும்
உனக்கான விடையாக
நான் இருப்பேன்
என்றும் தோழி
 என்ற பெயரில்  ! !.........