புதன், 18 செப்டம்பர், 2013

சென்னைவாசி

பெரிதாய் ஒரு தோரணை
சென்னையில் வசிக்கிறேன் என்று
ஊர்க்காரர் விமர்சிக்க ஒரு தலைப்பு கிடைத்துவிட்டது
சென்னையில்
சுகமான வாழ்க்கை வாழ்வார்கள்,
கை நிறைய சம்பளம்,
கிடைத்த நேரமெல்லாம் கடைதெரு பயணம் ,
துரித உணவு வாழ்க்கை என்று
விமர்சகரே சற்று வந்து பாரும்
சென்னைவாழ் மக்களை
காலரை தூக்கி சொல்வாய் நீ  பெரும் யோககாரன் என்று ...
சிங்காரமாக வாழப்போகிறோம் என்ற
கனவில் வருவபர்களுக்காகவே
காத்திருக்கும் சிக்கனமான  வாழ்க்கை
கை நிறைய சம்பளமாம் - ஆம்
அதைவிட  அதிகமான தேவைகள்
வாரவாரம் கடைதெரு பயணமாம் -ஆம்.
என்னை போன்றவர்களை பார்க்க சரியான இடம் அதுவல்லவோ ?
சென்னைவாசிகள் ஆடம்பரமானவர்கள்
என்று சொன்னது யாரோ எவரோ
இன்று சொன்னவர் இருந்திருந்தால்,
நிச்சயம் மன்னிப்பு கேட்டு இருப்பார் .
புரிந்து கொள்ளுங்கள்
சென்னையில் வாழ்வபர்களில் பெரும்பாலானோர்
சென்னைவாசிகள் அல்ல என்று !

வியாழன், 11 ஜூலை, 2013

திருமணம்

கரம் பிடிக்க வந்தவனை 
தரம் தாழ்த்தி ஏசும் 
உறவினர்கள் 
தலை நிமிர்ந்து வாழும் 
போது சிரம் தாழ்ந்து 
செல்வார்களா ?