என் திறமையை தேட
சொன்னர்கள்
நானோ என்னையே
என்னுள் தேடினேன் !
தேடலில் பலமுறை
தடங்களை தொலைத்ததுண்டு ...
இருப்பினும் இளமையின்
வேகம் என்னை விடவில்லை.
தேடலின் நீளம் அதிகமானது
கடைசியாக உன் பாதையில்
பயணிக்க எண்ணினேன்.
சிறு வயதில் நடக்க
கற்றுக்கொண்டேன்
விழுந்து எழ
கற்றுக்கொடுத்துதது
அனுபவம் .....
தேடலும் தொடங்கியது
உன் பாதையும் அடைந்தேன் !
இன்றும் உன்னை காண
முடியவில்லை என்ற
ஏக்கத்துடன் திரும்பும்
பல குரல்களுக்கு
மத்தியில் உன்னைகண்டே
தீருவேன் என்ற சில
குரல்களுடன் நானும்
ஒருவள் ஆக வலம் வருகிறேன்,
உன் கைகளைப் பிடித்து
கவிதை நடை பயில
விரும்பும் பலரில்
ஒருவளாக ! :) :) :)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக